
வெந்து தணிந்தது காடு டப்பிங்கை முடித்த சிம்பு
இப்படத்திற்கான டப்பிங்கை முடித்துவிட்டதாக நேற்று சமூக வலைத்தளத்தில் சிம்பு பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. சித்தி இதானி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சிம்பு நடித்து கடைசியாக வெளிவந்த "மாநாடு" படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இப்படத்தின் டீசரை கடந்த வருடக் கடைசியிலேயே வெளியிட்டார்கள். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு, டிரைலர் ஆகியவை வெளியாக உள்ளன.
கவுதம், ரஹ்மான், சிம்பு கூட்டணி "விண்ணைத் தாண்டி வருவாயா" படத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. அதே சமயம் "அச்சம் என்பது மடமையடா" படம் கால தாமத வெளியீட்டால் கவனம் ஈர்க்காமல் போய்விட்டது. "வெந்து தணிந்தது காடு" படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப்போகிறது என்பதற்கு இன்னும் நாற்பத்தைந்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!