
தங்கர் பச்சானின் ‛கருமேகங்கள் கலைகின்றன - யோகிபாபு, மம்தா மோகன்தாஸ் நடிக்கின்றனர்
முந்தைய திரைப்படங்கள் போலவே இத்திரைப்படமும் தங்கர் பச்சானின் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சிறிதும் சமரசம் செய்து கொள்ளாத தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட படமாக இது இருக்கும் என தங்கர்பச்சான் தெரிவித்தார்.
கண்மணி எனும் கதைப் பாத்திரத்திற்காக இந்தியாவிலுள்ள பல நடிகைகளிடம் நடிப்புத் தேர்வு நடத்திய பின் மம்தா மோகன்தாஸ் தேர்வாகி இருக்கிறார். இத்திரைப்படத்தின் மையமான பாத்திரத்தில் தான் நடிப்பதைப் பெருமையாக கருதுவதாக மம்தா மோகன்தாஸ் கூறுகிறார். மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார் போன்றோர் நடிக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!