
ஒரே நாளில் தனுஷ் ரசிகர்களுக்கு இரண்டு அப்டேட்
தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான "திருச்சிற்றம்பலம்" படத்தின் மூன்றாவது சிங்கிளும் நாளை ஜுலை 27ம் தேதி வெளியாக உள்ளது. ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் அப்டேட் வெளியாகிறது.
"திருச்சிற்றம்பலம்" படம் ஆகஸ்ட் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
"வாத்தி" படத்தில் சம்யுக்தா மேனன், சாய் குமார், தணிகல பரணி நடித்துள்ளார்கள். இப்படத்தின் அப்டேட் உடன் படம் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பு வருமா என தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!