
ஆண்ட்ரியாவை அடிக்கடி வெட்கப்பட வைத்த வட்டம் குழுவினர்
நேற்று அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய படக்குழுவினர்களில் பலர் தாங்கள் ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் என்பதைத் தவறாமல் பேசினார்கள். அதனால், அடிக்கடி ஆண்ட்ரியா வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தார். தொடர்ந்து பலரும் அப்படிப் பேசியதில் அவரது முகத்தில் அவ்வளவு சிரிப்பு. படத்தின் மற்றொரு கதாநாயகியான அதுல்யா ரவி, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளர்களும் தாங்கள் ஆண்ட்ரியாவின் ரசிகைகள் என்றார்கள்.
ஒரு மேடையில் அடுத்தடுத்துப் பேசிய ஆண், பெண் பிரபலங்கள் தாங்கள் ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் என்று பேசினால் அதை விட மகிழ்ச்சி என்ன இருக்கப் போகிறது. மஞ்சள் முகமாக மேடை ஏறிய ஆண்ட்ரியா நிகழ்ச்சி முடிந்த பின் வெட்கத்தில் சிவந்த முகமாகத்தான் இறங்கி வந்தார். படத்திற்கு "வட்டம்" எனப் பெயர் வைத்தற்குப் பதில் "வெட்கம்" எனப் பெயர் வைத்திருக்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!