
வாரிசு பட நிறுவனம் வெளியிட்ட அவசர அறிக்கை
ஜூலை 25, 2022
Advertisement
தெலுங்கு, தமிழில் விஜய் நடித்து வரும் வாரிசு மற்றும் ஷங்கர் இயக்கி வரும் ராம்சரண் -15 ஆகிய படங்களை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படங்களில் நடிப்பதற்காக அறிமுக நடிகர் - நடிகை தேர்வு நடந்து வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவியது. அதை பார்த்துவிட்டு புதுமுக நடிகர் நடிகைகள் பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். இதையடுத்து அந்த நிறுவனம் தற்போது ஒரு அவசர அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ஆர்.சி-15, எஸ்விசி- 50 படங்களுக்கு அறிமுக நடிகர்களை தேர்வு செய்யவில்லை. இது குறித்து வெளியாகி உள்ள அனைத்து செய்திகளும் முழுக்க முழுக்க வதந்தியே. அதனால் யாரும் சோசியல் மீடியாவில் வெளியான இந்த செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!