
நட்டி, ஸ்ரீகாந்த் இணையும் சம்பவம்
இவர்கள் தவிர இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை கோதண்டம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் ரஞ்சித் குமார். இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க அம்ரீஷ் இசை அமைக்கிறார்.
“உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு” என்கிறார் இயக்குனர் ரஞ்சித் குமார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!