
10 மொழிகளில் புஷ்பா-2
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் திட்டமிட்டனர். அதன்படி இரண்டாம் பாகத்திற்கு மேலும் மெருகூட்ட கதையைக் கொஞ்சம் மாற்றி எழுத ஆரம்பித்தார் சுகுமார். இதற்காக சில மாதங்களை அவர் எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில் "புஷ்பா" படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளில் உருவாக இருப்பதால் இந்த படம் பான்-வேர்ல்ட் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!