தனுஷ் குளோபல் ஸ்டார் : சமந்தா பாராட்டு
ஜூலை 22, 2022
Advertisement
தமிழ்த் திரையுலகத்தில் "துள்ளுவதோ இளமை" படம் மூலம் அறிமுகமானவர் தனுஷ். அவர் அறிமுகமாகி சில ஹிட் படங்களில் நடித்தாலும் அவரெல்லாம் ஒரு ஹீரோவா என கிண்டலடித்தவர்கள் உண்டு. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் சிறந்த படங்களில், சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றார் தனுஷ். அவர் மீதான விமர்சனங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கினார்.
நடிப்பதோடு மட்டுமல்லாமல், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது, படம் இயக்குவது என தனது மற்ற திரையுலகத் திறமைகளையும் இந்த உலகத்திற்குக் காட்டினார். தமிழில் மட்டும் நடிக்காமல் ஹிந்தி, பிரெஞ்ச் எனச் சென்றவர் தற்போது "அவஞ்சர்ஸ்" புகழ் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட் வரை சென்று நடித்துவிட்டார்.
தனுஷை ஒரு குளோபல் ஸ்டார் எனப் பாராட்டியுள்ளார் முன்னணி நடிகையான சமந்தா. அவர் கலந்து கொண்ட "காபி வித் கரண்" நிகழ்ச்சியில் பிரபல நடிகர்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுமாறு கேட்டதற்குத்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!