
சமரசம்? - விரைவில் ஓடிடியில் நயன்தாரா - விக்னேஷ் திருமணம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த வீடியோ நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக இந்த தம்பதியருக்கு சுமார் 25 கோடி ரூபாய் பணம் தரப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் தங்களது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சோசியல் மீடியாவில் வெளியிட்டதால் ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் செயல்பட்டதாக கூறி நெட் பிளிக்ஸ் நிறுவனம் அவர்களின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும், நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வந்தது.
இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனம் அதன் சமூகவலைதளத்தில், ‛‛நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரொமான்ட்டிக் போட்டோக்களை பகிர்ந்து விரைவில் நெட்பிளிக்ஸில் வருகிறார்கள்"" என தெரிவித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!