
மும்பையில் ஜோடியாக சுற்றும் சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி
சமீபத்தில் தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் என்கிற படத்தில் சித்தார்த்துடன் நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்து நடித்திருந்தார் இந்த நிலையில் சமீபத்தில் மும்பையில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் இருந்து வெளியே வந்த அதிதி ராவ் அங்கே வந்த சித்தார்த்துடன் ஒரே காரில் ஏறி கிளம்பி சென்றுள்ளார். முன்னதாக இவர்கள் இருவரையும் அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயற்சிக்க அதனால் கோபமான சித்தார்த், நேரம் வரும்போது நானே சொல்கிறேன்.. தயவுசெய்து புகைப்படம் எடுக்காதீர்கள்” என்று அவர்களிடம் கெஞ்சி கேட்டபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்துள்ளார். இதன் மூலம் சித்தார்த்தும் அதிதியும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்களோ என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!