
எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத ஜுலை 22 வெளியீடுகள்
வாரா வாராம் நான்கைந்து படங்கள் வந்தாலும், அடுத்து என்ன பெரிய படம் வரும் என தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள். இந்த வாரம் ஜுலை 22ம் தேதியும் நான்கைந்து படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அந்தப் படங்கள் எதுவுமே குறைந்தபட்ச எதிர்பார்ப்பை கூட ஏற்படுத்தவில்லை. அவற்றின் வியாபாரங்களும் மிகவும் மந்தமாக இருப்பதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“தேஜாவு, மஹா, நதி, வார்டு 126, சிவி 2” ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படம் இரண்டு, மூன்று நாட்களாவது தாக்குப் பிடித்து ஓடும் என்பது வார இறுதியில்தான் தெரியும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!