
இடைவெளிக்குப் பிறகு இன்ஸ்டா பக்கம் வந்த சமந்தா
கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் தனிப்பட்ட பதிவுகளைப் பதிவிட்டார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு விளம்பரப் பதிவை மட்டும் பதிவிட்டிருந்தார். அடிக்கடி விதவிதமான பதிவுகளை, புகைப்படங்களுடன் பதிவிட்டு ஆக்டிவ்வாக இருந்தவர் திடீரென ஒதுங்கியது பலரை ஆச்சரியப்படுத்தியது.
நாக சைதன்யா, சோபியா துலிபல்லா இடையிலான எழுந்த காதல் கிசுகிசுவை சமந்தா தரப்புதான் பரப்பி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், சமந்தா இப்படி இடைவெளி விட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அந்த இடைவெளிக்குப் பிறகு நேற்று இன்ஸ்டா ஸ்டோரியில் "காபி வித் கரன்" நிகழ்ச்சி பற்றிய வீடியோ ஒன்றையும், அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாருடனும் ஒரு போட்டோவைப் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி வியாழக்கிழமையன்று இரவு 7 மணிக்கு ஓடிடி தளத்தில் முதல் முறை ஒளிபரப்பாக உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!