
அடுத்தடுத்து தோல்விகளால் துவண்ட விஜய் படத் தயாரிப்பாளர்
ஹிந்தியில் அவர் தயாரிப்பில் ஷாகித் கபூர் நடித்து வெளிவந்த "ஜெர்சி" படம் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளிவந்த மற்றொரு ஹிந்திப் படமான ராஜ்குமார் ராவ் நடித்த "ஹிட்" படமும் முதல் வாரத்திலேயே மிகச் சுமாரான வசூலை மட்டுமே கொடுத்து தோல்வியடைந்துவிட்டது.
தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், விஜய் நடிக்கும் "வாரிசு" படத்தையும் தயாரித்து வருகிறார். ஷங்கர், விஜய் என இரண்டு தமிழ்க் கலைஞர்கள் அவருக்கு பெரிய வெற்றியைத் தருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!