
அஜித் படத்தில் தெலுங்கு வில்லன்
வலிமை படத்தில் தெலுங்கு இளம் ஹீரோ கார்த்திகேயாவை தமிழுக்கு அழைத்து வந்து வில்லனாக்கியது போல இந்த படத்தில் தெலுங்கு வில்லன் நடிகர் அஜய் என்பவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அஜய் ஏற்கனவே தமிழில் அஜித் நடித்த கிரீடம் படத்தில் வில்லனாக நடித்தார். இதுதவிர மலைக்கோட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் புனேயில் தொடங்க இருக்கும் அடுத்த கட்ட படப்பிடிப்பில் அஜய் கலந்து கொள்வார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!