
பிரதாப் போத்தன் உடல் தகனம்
கமல்ஹாசன், கார்த்தி, பிரபு, ராம்குமார், மணிரத்னம், சீனுராமசாமி, பிசிஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, பூர்ணிமா பாக்யராஜ், ராஜிவ் மேனன், கனிகா, மனோபாலா, கருணாஸ், வெற்றிமாறன், சின்னி ஜெயந்த், ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பிரதாப் போத்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
பிரதாப் போத்தனின் உடல் இன்று காலை சென்னை, கீழ்பாக்கத்தில் இருந்து அருகில் உள்ள வேலங்காடு மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்த பின் பிரதாப் போத்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!