
நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்ப ஓடிடி நிறுவனம் தயக்கம் என தகவல்
குறைவானவர்கள் கலந்து கொண்டாலும் ரிச்சாக நடந்த இந்த திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்ப முன்னணி ஓடிடி நிறுவனம் 25 கோடி கொடுத்து உரிமம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்களின் திருமண வீடியோவை ஓ.டி.டி. தளம் வெளியிட மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதோடு தாலிகட்டும் படத்தை தவிர வேறு படமோ கிளிப்பிங்ஸோ மீடியாக்களுக்கு தரக்கூடாது என்று ஓடிடி நிறுவனம் தடை விதித்திருந்ததாம். ஆனால் அதை மீறி திருமணமான 30வது நாளை கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவன் திருமணத்தில் ரஜினி, ஷாருக்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சில படங்களை வெளியிட்டார். இது ஓடிடி தளத்திற்கு பிடிக்கவில்லையாம். இதனால் நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதில் இருந்து ஓடிடி நிறுவனம் பின்வாங்குவதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!