
தி லெஜண்ட் - தெலுங்கு, கன்னட உரிமம் விற்பனை
இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் பெற்றிருக்கிறார். கேரளாவில் மாநிலத்தில் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்தியா தவிர உலக நாடுகளின் வெளியீட்டு உரிமையை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநில வெளியீட்டு உரிமத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. உரிமையாளர் திருப்பதி பிரசாத்தும், தயாரிப்பாளரும் நடிகருமான அருள் சரவணனும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதேபோல கன்னட வெளியீட்டு உரிமத்தை கே.செந்தில் என்பவர் பெற்றுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!