
‛பொன்னியின் செல்வன் - விக்ரமின் டீசருக்கான டப்பிங் வீடியோ வெளியானது
ஜூலை 14, 2022
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் டீசருக்காக விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விக்ரம் தனது ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு டப்பிங் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. திரையில் ஆதித்த கரிகாலனாக ஆவேசமாக நடித்திருந்த விக்ரம் டப்பிங்கிலும் அதே ஆவேசத்துடன் பேசிய காட்சி அந்த மேக்கிங் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!