
3டி வடிவில் விரைவில் வெளியாகும் ஆளவந்தான்?
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் இடம் பெற்ற, 2டி அனிமேஷன் காட்சிகள், பெரும் பாராட்டுக்களை பெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முதலில், 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படத்தை துவங்கினார். ஆனால் இப்படம், 20 கோடி ரூபாயில் முடிந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இப்படம் பெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் 3டி முறையில் புதிய வடிவில் ஆளவந்தான் படத்தை கலைப்புலி தாணு விரைவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!