
உதயநிதிக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்த சிம்பு
இந்த வருடத்தில் அவர்கள் வினியோகம் செய்த படங்கள் அனைத்தும் வசூலில் ஏமாற்றவில்லை. அடுத்து "கோப்ரா, சர்தார், கேப்டன், வெந்து தணிந்தது காடு" ஆகிய படங்களை வெளியிட உள்ளார்கள்.
சிம்பு நடித்த "விண்ணைத் தாண்டி வருவாயா" படத்தைத்தான் ரெட் ஜெயன்ட் மூவிஸ் முதன் முதலில் வாங்கி வெளியிட்டது. அதற்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து சிம்பு நடிக்கும் ஒரு படத்தை மீண்டும் வாங்கி வெளியிடுகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் சிம்பு.
“12 வருடங்கள் கழித்து மீண்டும் உங்களுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சி அண்ணா,” என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 8ம் தேதி ஆர்யா நடித்துள்ள "கேப்டன்" படத்தை வெளியிட்ட ஒரு வாரத்தில் செப்டம்பர் 15ம் தேதி "வெந்து தணிந்தது காடு" படத்தையும் வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!