
விக்ரம் வரவேற்பு: மிரண்டு போயுள்ள ரஜினி ரசிகர்கள்
ஓடிடியில் படம் வெளிவந்த பிறகு அதை நிறுத்தி நிதானமாகப் பார்க்கும் வசதி உள்ளது. "விக்ரம்" படத்தில் திரைக்கதையில் பல நுணுக்கங்கள் இருக்கும். "டீடெய்லிங்" அதைவிட இன்னும் அதிகமாக இருக்கும். படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருப்பார் லோகேஷ் கனகராஜ். இப்படி ஒரு தரமான படத்தில் கமல்ஹாசன் நடித்து பெரிய வரவேற்பையும், 400 கோடிக்கும் அதிகமான வசூலையும் கொடுத்தது ரஜினி ரசிகர்களை நிறையவே வெறுப்பேற்றி இருக்கிறது போலிருக்கிறது.
ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஓடிடியில் படத்தைப் பார்த்த பிறகு குறை கண்டுபிடிக்கிறோம் என தப்புத் தப்பாக குறை இல்லாததைக் கூட குறையாகச் சொல்லி கமல் ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். படத்தை ஒழுங்காக புரிந்து கொண்டு பாருங்கள் ரஜினி ரசிகர்களே என்பதை ஒரு சில கெட்ட வார்த்தைகளுடன் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
ரஜினிகாந்தின் அடுத்த படம் "விக்ரம்" படம் போல ஒரு தரமான படமாக இருக்க வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் பேராவலாக தற்போது உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!