
நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண புகைப்படங்கள் ஒரு மாதத்திற்கு பின் வைரல்
இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போதே அவர்களின் திருமண போட்டோக்கள் வெளியாகி வைரலானது. தொடர்ந்து வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்ற இருவரும் தற்போது அவரவர் படங்களில் பிஸியாகி உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகி உள்ள நிலையில் விக்கி நயன் ஒரு மாதம் அனிவர்சரி என்ற ஹேஷ்டாக்கை பகிர்ந்து அன்று திருமணத்தில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள் போட்டோவை விக்னேஷ் சிவன் இப்போது வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் ரஜினிகாந்த், ஷாரூக்கான், மணிரத்னம், சூர்யா-ஜோதிகா, விஜய் சேதுபதி, இயக்குனர் அட்லீ உள்ளிட்டோர் தங்களை வாழ்த்திய போது எடுத்த போட்டோக்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அதிலும் ரஜினி மணமக்களுக்கு பரிசு பெட்டகத்தை அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!