
அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் தி லெஜண்ட்
எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி "ஒரு லெஜண்டாக" எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து மொசலோ மொசலு, வாடிவாசல் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களில் வெளியாகிறதாம். படத்தின் தமிழக உரிமையை கைப்பற்றி கோபுரம் சினிமாஸ் சார்பாக அன்புச்செழியன் வெளியிடுகிறார். ஒரு அறிமுக நடிகரின் படத்திற்கு இவ்வளவு தியேட்டரா என ஆச்சர்யப்பட்டு பார்க்கிறது தமிழ் திரையுலகம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!