
சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த காட்பாதர் குழு
இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், வீடியோ ஆகியவை வெளியிடப்பட்டன. வீடியோவில் சிரஞ்சீவியின் பெயரை ஆங்கிலத்தில் "Chiranjeeevi" என மூன்று "e" சேர்த்திருந்தார்கள். ஆனால், மற்ற இடங்களில் ஒரு வழக்கம் போல இரண்டு "e" மட்டும் தான் இருந்தது. இருப்பினும் நியூமராலஜிபடி சிரஞ்சீவி தனது பெயரில் மேலும் ஒரு "e" சேர்த்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. அவர் நடித்து கடைசியாக வெளிவந்த "ஆச்சார்யா" படம் படுதோல்வி அடைந்ததால்தான் அவர் இப்படி மாற்றிவிட்டார் என்றும் சொன்னார்கள்.
ஆனால், சிரஞ்சீவி தரப்பில் அதை மறுத்துள்ளார்களாம். கவனிக்காமல் விட்டதால் நேர்ந்த தவறு அது என்றும் தெரிவித்துள்ளார்கள். விரைவில் அதைச் சரி செய்து புதிய வீடியோவை வெளியிடப் போகிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!