
ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி?
"மாஸ்டர்" படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர், அடுத்து "விக்ரம்" படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்தார். தெலுங்கில் "உப்பெனா" படத்தில் வில்லனாக நடித்தவர் அடுத்து "புஷ்பா 2" படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
அதற்கடுத்து ஹிந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக "ஜவான்" படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவலும் வெளிவந்துள்ளது. தமிழ் இயக்குனரான அட்லி இயக்கி வரும் இப்படத்தில் தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். யோகி பாபுவும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்போது விஜய் சேதுபதியும் இணையப் போகிறார் என்கிறார்கள்.
தமிழ், தெலுங்கைத் தொடர்ந்து ஹிந்தியிலும் வில்லனாக மாறுகிறார் விஜய் சேதுபதி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!