
லத்தி சண்டை காட்சியில் விஷால் காயம் : படப்பிடிப்பு ரத்து
கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷாலை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தி தாக்க ஆரம்பிக்க, தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து நொறுக்கி கைதியை பிடித்து செல்கிறார். இது படத்தின் காட்சி.
இந்த காட்சியில், சண்டை கலைஞர்கள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்க, அதில் டைமிங் மிஸ்சாகி எதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார் விஷால். உடனே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விஷாலுக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே படத்திற்காக இதற்கு முன்பும் விஷால் சண்டை காட்சியில் காயம் அடைந்ததது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!