
தமிழகத்தில் 200 கோடியைத் தாண்டுமா விக்ரம் வசூல்
தமிழகத்தில் 180 கோடி, தெலங்கானா, ஆந்திராவில் 41 கோடி, கேரளாவில் 40 கோடி, கர்நாடகத்தில் 25 கோடி, இதர இந்திய மாநிலங்களில் 17 கோடி என இப்படம் 300 கோடியைக் கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 180 கோடி வசூலைக் கடந்துள்ளது. 200 கோடியை இந்தப் படம் கடக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆனால், ஜுலை 8ம் தேதி இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்குள் தமிழகத்தில் மேலும் 20 கோடியை வசூலிக்க முடியுமா என்பது சந்தேகமே. இருப்பினும் ஓடிடியில் வெளியான பின்னும் சில படங்கள் தியேட்டர்களில் ஓடி வசூலித்ததும் நடந்துள்ளது. ஒரு மாதம் ஆன பின்னும் இன்னும் தமிழகத்தில் பல தியேட்டர்களில் "விக்ரம்" படம் ஓடி வருகிறது. அதனால், 200 கோடி சாதனை புரியவும் வாய்ப்பிருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!