
இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்!
ஆனால் அமலா பால் இப்போது வரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாகவே அவ்வப்போது திருமண வதந்திகளிலும் அவர் சிக்கிக் கொள்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அமலாபால் உரையாடிய போது ஒரு ரசிகர், உங்களை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அமலாபால், அந்த தகுதி என்னவென்று இன்னும் எனக்கு தெரியவில்லை. அதோடு என்னை நானே புரிந்து கொள்ளும் பயணத்தில்தான் இப்போது இருந்து கொண்டிருக்கிறேன். அதனால் என்னை திருமணம் செய்து கொள்ள என்னென்ன தகுதி வேண்டும் என்பதை கண்டுபிடித்தவுடன் கண்டிப்பாக உங்களுக்கு சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அமலா பால்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!