
விக்ரம் படத்தை பெரிதும் பாராட்டிய மகேஷ் பாபு
“விக்ரம், பிளாக்பஸ்டர் சினிமா. புதுயுகத்தின் கிளாசிக். லோகேஷ் கனகராஜ், உங்களை சந்தித்து இந்த "விக்ரம்" படத்தின் மொத்த செயல்முறை என்ன என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும். மனதை வளைக்கும் உணர்வு தரும் படம் பிரதர். விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பு மின்னுகிறது. இதை விட சிறப்பாக நடிக்க முடியாது. வாவ், அனிருத் என்ன ஒரு அற்புதமான இசை, இதுவரையில் வந்ததில் உங்களின் சிறப்பு. எனது பிளே லிஸ்ட்டில் நீண்ட காலம் டாப்பில் இருக்கப் போகிறது. கடைசியாக சாதனையாளர் கமல்ஹாசன். அவரது நடிப்பைப் பற்றி கமெண்ட் செய்ய எனக்குத் தகுதி இல்லை. உங்களது பெரிய ரசிகன், எனது பெருமையான தருணம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். உங்களுக்கும் உங்கள் அற்புதமான குழுவுக்கும் வாழ்த்துகள் சார்,” எனப் பாராட்டியுள்ளார்.
மகேஷ் பாபுவின் இந்த பாராட்டுக்கு அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது. மகேஷ்பாபுவின் பதிவிற்கு பதிலளித்து லோகேஷ் கனகராஜ், "உங்களை சீக்கிரம் சந்திக்க ஆசை சார், நன்றி,” என பதில் பதிவு செய்துள்ளார். மகேஷ்பாபுவின் பாராட்டுக்களுக்கு கமல்ஹாசன் இன்னும் எந்த நன்றியும் சொல்லவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!