
உருவக்கேலிக்கு எதிராக உருவாகி உள்ள படம்
படம் பற்றி இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன் கூறியதாவது: இயக்குனர் பாலாவுடன் நாச்சியார் மற்றும் வர்மா ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தின் மையக்கரு உருவ கேலி செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் கதை. அதாவது ஒருவரின் உருவத்தை வைத்து எடை போடுவது மிகவும் தவறு.
எல்லா காலகட்டத்திலும் உருவ கேலி என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இதை வைத்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் கூட வருகிறது. மேலும், இதை வைத்து நிறைய நகைச்சுவை காட்சிகளே எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்த்து பள்ளிகளில் குழந்தைகளும் அதே தவறை செய்கின்றனர். கேலி பேசுபவர்கள் பேசி விட்டு சந்தோஷமா சிரிப்பார்கள். ஆனால், பாதிக்கப்படும் குழந்தைகள் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
உன்னை யாராவது உருவ கேலி செய்தால் அதை பொருட்படுத்தாமல் நீ வெற்றி பெற்று விட்டால் பிறகு உன்னை யாரும் கேலி செய்ய மாட்டார்கள் என்று தவறான அறிவுரையும் வழங்கப்படுகிறது. இது மிகவும் பரிதாபத்திற்குரியது. ஆகையால், உருவ கேலி செய்வது தவறு என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படத்தை எடுத்திருக்கிறேன். கேலி பேசுபவர்களுக்கு அறிவுரை கூறும் படமாக இருக்காது. மாறாக கேலிக்கு ஆளாகுபவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!