
ஆஸ்கர் குழுவில் இடம் பிடித்த சூர்யா, கஜோல்
தமிழ் சினிமாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ஏற்கனவே இந்த குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலையில் தற்போது சூர்யாவையும் ஆஸ்கர் நிர்வாக குழு தேர்வு செய்திருக்கிறது. இந்த குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!