
வாரிசு தயாரிப்பாளருக்குப் பிறந்த ஆண் வாரிசு
இவருக்கு 2020ம் ஆண்டு வைகா ரெட்டி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. தில் ராஜுவின் முதல் மனைவி அனிதா உடல் நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்ததால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
52 வயதான தில் ராஜுவை விட பல வயது குறைந்தவர் அவரது இரண்டாவது மனைவி வைகா. கர்ப்பமடைந்திருந்த வைகா இன்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தையை நலமுடன் பெற்றெடுத்தார். "வாரிசு" படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு ஆண் வாரிசு பிறந்ததால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.
தில் ராஜுவுக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகள் இருக்கிறார். அவர் அப்பாவுடன் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தில் ராஜுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!