
தடைகளைத் தாண்டி தயாராகப் போகும் இந்தியன் 2
கமல் நடித்து அடுத்து வெளிவரும் படங்களுக்கும் நல்ல வியாபாரம், வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடும். அதனால், கடந்த இரண்டு வருடங்களாக முடங்கி இருக்கும் "இந்தியன் 2" படத்திற்கு தற்போது உயிர் வந்துள்ளது.
ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைக்கா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று பின் பஞ்சாயத்து நடந்து முடிந்துள்ளது. "இந்தியன் 2" படத்தில் உதயநிதி இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
ஷங்கர், கமல்ஹாசன், லைக்கா, உதயநிதி தரப்பு என அமர்ந்து பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்துள்ளார்களாம். ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்க இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். அது முடிந்ததுமே "இந்தியன் 2" ஆரம்பமாகிவிடும் என்று சொல்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!