
சூர்யாவின் வாடி வாசல் மேலும் தள்ளிப் போகும் ?
இந்தப் படத்தை முடித்த பிறகு சூர்யா, இயக்குனர் சிவா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள "வாடி வாசல்" படத்தின் படப்பிடிப்பு மேலும் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் "விடுதலை" படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் உள்ளார். அந்தப் படத்தின் பணிகளை முழுவதுமாக முடித்து படத்தை வெளியிட்ட பின்தான் "வாடி வாசல்" வேலைகளை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.
அதற்குள்ளாக சூர்யா, சிவா படம் நடந்து முடிந்துவிடுமாம். இந்தப் படத்தை முழு நீள கமர்ஷியல் ஆக்ஷன் படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, இந்தக் கூட்டணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தை ஆரம்பிக்கவேயில்லை. இப்போது தயாரிப்பாளர் மாறுவாரா அல்லது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே மீண்டும் தயாரிக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!