
புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி ?
இப்படத்தின் முதல் பாகத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடம் கேட்டிருந்தார்கள். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகத் தகவல். இருப்பினும் இரண்டாம் பாகத்தில் அவருக்காக ஒரு முக்கிய போலீஸ் உயர் அதிகாரி கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்களாம். அதில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சுகுமார் தயாரித்த தெலுங்குப் படமான "உப்பெனா" படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் தமிழ் நடிகரும், ஹிந்தி நடிகரும் நடித்தால் படத்திற்கு பக்கபலமாக இருக்கும் என அல்லு அர்ஜுன் நினைக்கிறாராம். விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்தால் "விக்ரம்" படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் பகத் பாசிலுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிப்பார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!