
விக்ரமின் கோப்ரா-வையும் கைப்பற்றிய உதயநிதி
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் 11 -ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் திரையரங்கு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வெளியிட்டு வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். அந்தவகையில் கோப்ரா படமும் உதயநிதி வசமாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!