
தி வாரியர் நாயகன் ராம் பொத்தினேனி காதல் திருமணம்
2006ம் ஆண்டு வெளிவந்த "தேவதாசு" தெலுங்குப் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராம் பொத்தினேனி. “ரெடி, உன்னதி ஒக்கட்டே ஜிந்தகி, கண்டீரகா, பண்டகா சேஸ்கோ, நேனு சைலஜா, ஐ ஸ்மார்ட் சங்கர்” உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
பள்ளி காலம் முதல் தன்னுடன் பழகிய தோழி ஒருவரைக் காதலித்து வருகிறாராம். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.
ராம் பொத்தினேனி சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்தவர். அந்த பள்ளித் தோழி சென்னையைச் சேர்ந்தவரா என்பது அவர் விரைவில் அறிவிக்கும் போது தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!