
புதிய சாதனை படைத்த தி வாரியர் - புல்லட் பாடல்
இப்படத்தில் இடம் பெற்ற "புல்லட்" பாடல் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் சிலம்பரசன், ஹரிப்ரியா பாடியுள்ள இந்தப் பாடல் யு டியூபில் தமிழில் 57 மில்லியன் தெலுங்கில் 73 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் மியூசிக் ஆப்களான ஸ்போட்டிவை, மோஜ், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உள்ளிட்டவற்றில் ஒட்டு மொத்தமாக 11 பில்லியன் முறை கேட்கப்பட்டுள்ளதாம். தென்னிந்திய மொழிப் படம் ஒன்றின் பாடல் 10 பில்லியன் சாதனையைப் படைத்துள்ளது இதுவே முதல் முறையாம்.
பாடலுக்குக் கிடைத்துள்ளது போலவே படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!