
3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க தடை
இதுபோன்ற காட்சிகளுக்கு முன்பு பொம்மைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது நிஜ குழந்தைகளையே காட்டுகிறார்கள். இப்படியான குழந்தைகளை கொண்டு வர தனியாக ஏஜெண்ட் இருக்கிறார்கள். அவர்கள் சினிமாவில் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்களின் விபரங்களை சேகரித்து அவர்களின் குழந்தைகளை நடிக்க வைப்பார்கள். இதற்கு பெரிய தொகை சம்பளமாக கொடுப்பார்கள்.
இந்த நிலையில் இனி 3 மாத்திற்கு உட்பட் குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைக்ககூடாது. மூன்று மாதத்துக்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெற வேண்டும். இரவு நேரங்களில் குழந்தைகளை படப்பிடிப்பில் ஈடுபடுத்தக்கூடாது, இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறினால், மூன்று வருடம் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. விரைவில் இது அரசாணையாக வெளியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!