
கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்?
இப்படி கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் இந்த ஆண்டில் வெளியாக உள்ள நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து ஜோக்கர், குக்கூ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் இந்த படத்தில் பேட்ட, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஜப்பான் என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!