
5 வருடங்களுக்கு பிறகு படப்பிடிப்பில் பாவனா: கைதட்டி வரவேற்பு
அதன்பிறகு சில கன்னட படங்களில் நடித்து வந்த பாவனா சொந்த காரணங்களுக்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், ஐந்து வருடங்களுக்குப் பிறகு "என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு" என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்புக்கு வந்த பாவனாவை படப்பிடிப்பு குழுவினர் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர். இதுதவிர மலையாள திரையுலகினர் பலரும் பாவனாவுக்கு வாழத்து தெரிவித்து வருகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!