
777 சார்லி படத்திற்கு ரஜினிகாந்த் பாராட்டு
இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் நாயகன் ரக்ஷித்திற்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை ரக்ஷித் பகிர்ந்துள்ளார்.
“இன்றைய நாள் என்ன ஒரு அற்புதமான ஆரம்பம். ரஜினிகாந்த் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் நேற்று இரவு "777 சார்லி" படத்தைப் பார்த்து பிரமித்துள்ளார். படத்தின் உருவாக்கத் தரம், படத்தின் ஆழ்ந்த டிசைன் மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் ஆன்மிகத்தில் முடிவடைவது, ஆகியவற்றைக் குறித்து உயர்வாகப் பேசினார். சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது அற்புதமானது, நன்றி சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!