
ஜுன் 24ல் நான்கு முனைப் போட்டி
இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜுன் 24ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள "மாமனிதன்", சுந்தர் சி, ஜெய் நடித்துள்ள "பட்டாம்பூச்சி", சிபிராஜ் நடித்துள்ள "மாயோன்", அசோக் செல்வன் நடித்துள்ள "வேழம்",ஆகிய படங்கள் வெளிவருகின்றன. இந்தப் படங்களுக்கிடையேதான் போட்டி இருக்கும். மேலும், சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
கலையரசன் நடித்துள்ள "டைட்டானிக்", அரவிந்த்சாமி நடித்துள்ள "கள்ளபார்ட்" ஆகிய படங்கள் ஜுன் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இரண்டு படங்களும் வெளியாகவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!