
தமிழில் வெளியிடப்படாத வாரிசு போஸ்டர்கள்
நேற்று வெளியான முதல் பார்வை மற்றும் இன்று காலை வெளியான இரண்டாவது பார்வை போஸ்டர்கள் இரண்டுமே ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகி உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள பெயரை தமிழில் போட எவ்வளவு நேரமாகப் போகிறது. மேலும், ஆங்கிலத்தில் இப்படத்தின் பெயரைக் குறிப்பிடும் போது "வரிசு" என பொருள்படும் விதத்தில் "Varisu" எனக் குறிப்பிடுவதாகவும் ரசிகர்கள் குறைபட்டுள்ளனர்.
இதனிடையே இன்று(ஜூன் 22) மாலை 5.02 மணிக்கு படத்தின் மூன்றாவது போஸ்டர் வெளியானது. அதிலாவது தமிழ் இடம் பெறுமா என்று பார்த்தால் அதிலும் ஆங்கிலத்தில் தான் வெளியானது. பைக் ஒன்றில் ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி அமர்ந்துள்ளார் விஜய்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!