
கார்த்தி படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் ‛பிரின்ஸ்
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படம் சில காரணங்களால் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!