
விஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் 66 பட பர்ஸ்ட் லுக்
ஜூன் 20, 2022
Advertisement
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார் . தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம், பிரபு, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜுன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!