
நான் தவறாக பேசவில்லை, எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது: சாய்பல்லவி
அதில், ‛நான் இடதுசாரியும் இல்லை, வலது சாரியும் இல்லை. நடுநிலையாக இருக்கிறேன். விராட பருவம் புரமோஷன் நிகழ்ச்சியில் நான் தவறாக எதுவும் பேசவில்லை. ஆனால் எனது பேச்சை தவறாக புரிந்து கொண்டார்கள். எந்த ஒரு உயிரும் மதம், இனம், மொழி, சாதி போன்ற வேறுபாட்டிற்காக துன்புறுத்தப்படவோ, பறிக்கப்படவோ கூடாது என்றுதான் நான் பேசி இருந்தேன். ஆனால் அது தவறாக சித்தரிக்கப்பட்டு சர்ச்சை ஆக்கப்பட்டது. இது என்னை வேதனைப்படுத்தி உள்ளது. இதுபோன்ற நேரத்தில் எனக்கு பலரும் ஆதரவாக இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சாய்பல்லவி அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!