
விக்ரம் சக்சஸ் மீட்டில் சைவ, அசைவ உணவு வகைகளுடன் தடபுடல் விருந்து : கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
இந்நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடந்தது. இதில் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி உள்ளிட்ட விக்ரம் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது நிகழ்வில் கலந்து கொண்டு அனைவருக்கும் 40 வகையான சைவ, அசைவ உணவு வகைகளை கொடுத்து அசத்தி உள்ளனர். நாட்டுக்கோழி சூப், முருங்கைக் கீரை சூப், மட்டன் கீமா, சிக்கன் வறுவல், வஞ்சரம் மீன், இறால், மட்டன் சுக்கா, மட்டன், சிக்கன் பிரியானி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, ஐஸ்கிரீம், ஜூஸ் வகைகள் என தடபுடலாக இந்த விருந்து நடந்தது.
இந்த விருந்தில் கமல்ஹாசன், லோகஷ் கனகராஜ், அனிருத், உதயநிதி உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று சாப்பிட்டனர்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!