
மூன்று மொழிகளில் வெளியாகும் ‛மாமனிதன் : தலைவர்கள் சிலைக்கு மரியாதை
இந்த படத்திற்கான புரொமோஷன் பணிகள் துவங்கிவிட்டன. இந்நிலையில் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து சீனுராமசாமி மரியாதை செய்தார். அதேப்போன்று நடிகர் சிவாஜியின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதுபற்றி சீனுராமசாமி கூறுகையில், ‛‛மாமனிதன் திரைப்படத்தின் வருகையையொட்டி என் கலை உணர்ச்சியின் தூண்டாமணி விளக்குகள், தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் முத்தழிழ் அறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இம்மூவருக்கும் மலர் மரியாதை செய்தேன்"" என பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!