
சூர்யா - சிவா இணையும் படம் கைவிடப்படவில்லை
அதன் பிறகு வெற்றிமாறன், ஞானவேல் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதால் சிவா படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக வேறு நடிகரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க சிவா கால்சீட் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த செய்தியை சிவா வட்டாரம் மறுத்துள்ளது.
அவர்கள் கூறுகையில், தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, வெற்றி மாறன் படத்தை முடித்ததும், சிவா இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அந்த படம் ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது என்கிறார்கள். அதனால் வெற்றிமாறனின் வாடிவாசலை முடித்ததும் சிவா, ஞானவேல் ஆகியோர் இயக்கும் படங்களில் சூர்யா நடிப்பார் என்று தெரியவந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!